பல நாள் தேடுதலுக்குப் பின்னர் இராணுவத்தினரின் உதவியுடன் ‘அக்போ’ யானை பாதுகாப்பாக மீட்பு!

Date:

இலங்கையின் தந்தம் கொண்ட காட்டு யானையான ‘அக்போ’ (Agbo), இராணுவத்தினரின் உதவியுடன் இன்று (19) அநுராதபுரம் மாவட்டத்தின் நச்சதுவ இஹத்தாவ வனப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய, யானையைத் தேடும் நடவடிக்கைக்கு உதவுவதற்காக இலங்கை இராணுவத்தினரைக் கொண்ட விசேட குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டது.

பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஆரம்பகட்டமாக 30 இராணுவத்தினரைக் கொண்ட படைப்பிரிவு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதுடன், தேடுதலை விரைவுபடுத்தும் நோக்கில் பின்னர் இராணுவத்தினரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.

இதன்போது, வனவிலங்கு அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட்ட இராணுவத்தினர், தந்தம் கொண்ட காட்டு யானையான அக்போவைக் கண்டறியும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

‘Bus for Zahira’வுக்காக ஊரையே ஒன்றுதிரட்டிய ஆளுமை புத்தளம் மரிக்கார்!

மரிக்கார் மனிதம் நிறைந்த ஒரு சிறந்த மனிதர்! எமது ஊரின் நல்...

உலகின் சிறந்த பொதுப் போக்குவரத்து நகரங்களின் பட்டியலில் ரியாத் மெட்ரோ: அமெரிக்க நிறுவனங்களின் பங்களிப்புடன் மாபெரும் சாதனை!

உலகின் அதிநவீன மற்றும் லட்சியப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் 'ரியாத்...

‘நான் தவறாக வழிநடத்தப்பட்டேன்’; ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு குறித்து மைத்திரி விளக்கம்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குப்...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பெயரைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் மோசடிகள் குறித்து எச்சரிக்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பெயரைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் போலியான விளம்பரங்கள் மற்றும் சமூக...