Saturday, October 31, 2026

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு!

1 min read · 27 reads
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட 86ஆம் இலக்க கட்டளையை மீறி, நுகர்வோருக்கு தொடர்ச்சியாக எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கத் தவறியமை தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு கொழும்பு புதுக்கடை இலக்கம் 5 நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு அழைப்பாணை விடுத்த நீதிமன்றம், வழக்கை எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளது.