Wednesday, November 25, 2026

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாசீர் மெளலவியை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான விசேட கலந்துரையாடல்

1 min read · 7 reads
இந்தியாவில் 5 வருடங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள யாசீர் மெளலவியை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான சட்ட உதவிகளை வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (24) கொழும்பில் நடைபெற்றது.
ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும ஆகியோரின் பிரசன்னத்துடன்  பைசர் முஸ்தபாவின் அலுவலகத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் யாசீர் மெளலவியின் தாயார், அவரது சகோதரர், ஊடகவியலாளர் சகோதரர் ஹாபிஸ் அப்துர் ரஹ்மான், பா.உ பைசர் முஸ்தபாவின் பிரத்தியேக செயலாளர் சகோ. ரியாஸ்தீன் சில்மி, ஷேக் ஹைதர் அலி அல்-ஹலீமி, ஊடகவியலாளர் ரிப்தி அலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்தியா தமிழ் நாட்டில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட யாசீர் மெளலவி தொடர்பான வழக்கில், போலி ஆவணம் தயாரித்த குற்றத்திற்காகவே அந்நாட்டு நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவரது சட்டத்தரணி சுபாஷ் உள்ளிட்ட இந்திய சட்டத்தரணிகளுடன் நேரடியாகக் கலந்தாலோசிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. தற்போதைய சட்ட நிலைமை, மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் யாசீர் மெளலவியை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.