Wednesday, November 11, 2026

சவூதி அரேபியாவில் இலங்கை மாணவர்களுடன் தூதுவர் அமீர் அஜ்வத் முக்கிய சந்திப்பு: பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உறுதி!

1 min read · 2 reads

தாயிப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதி பள்ளிவாசலில் சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர்  ஓ. எல். அமீர் அஜ்வத் (Omar Lebbe Ameer Ajwad) அவர்களுடனான சிறப்பான கலந்துரையாடல் ஒன்று (10) நடைபெற்றது.

இச்சந்திப்பில், சவூதி அரேபியாவில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், இலங்கையிலுள்ள மாணவர்கள் சவூதி அரேபியப் பல்கலைக்கழகங்களில் புலமைப்பரிசில் (Scholarship) மூலம் கல்வி கற்பதற்கான விண்ணப்ப நடைமுறைகள்,  எதிர்காலக் கல்வி வாய்ப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்வது மற்றும் உலகளாவிய ரீதியில் வினைத்திறன் மிக்கவர்களாக உருவாகுவது தொடர்பான பெறுமதியான ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.

இலங்கை மாணவர்களையும் தூதுவரையும் ஒன்றிணைத்து இச்சந்திப்பை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த தாயிப் அழைப்பாளர் உஸ்தாத் ஆலிம் அஸ்மி யூசூபி (Azmy Abdul Salam Yousufy) அவர்களுக்கு அமைப்பாளர்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.

மேலும், மாணவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து தெளிவான வழிகாட்டல்களை வழங்கிய இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களுக்கு இலங்கை மாணவர்கள் சார்பாக இதயபூர்வமான பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டன.