தென்கொரியாவில் இடம்பெற்ற ட்ரக் வண்டி விபத்தில் இலங்கையர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று முன்தினம் (26) தென்கொரியாவின் ஹூவாசோங் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வேலை முடிந்ததன் பின்னர் தமது வதிவிடத்திற்கு நடைபாதையாக சென்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு எதிர்த்திசையில் வந்த சரக்கு ட்ரக் வண்டியொன்றின் பின்பக்கத்தில் பொருட்களை ஏற்றும் பகுதியில் வெளிப்பக்கமாக நீட்டிக்கொண்டிருந்த பாகம் அவர்கள் மீது மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
30 வயதான குறித்த இலங்கை பணியாளர்களின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.
தமது கடமையயை சரிவரச் செய்யாததன் காரணமாக இந்த மரணங்கள் சம்பவிபத்துள்ளதாக தெரிவித்து குறித்த ட்ரக் வண்டியின் 50 வயதான சாரதிக்கு எதிராக தென்கொரிய பொலிசார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த இலங்கையர்கள் குறித்தான அடையாளம் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.