Saturday, November 14, 2026

டிசம்பர் முதல் அப்பியாசக் கொப்பிகளின் விலைகள் குறைப்பு

1 min read

அண்மையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்வைத்த வரவு செலவு திட்டத்தில் அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களின் வரிக்குறைப்பு தொடர்பில் விசேட திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதுல் அப்பியாசக் கொப்பிகளின் விலைகள் 18 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தேசிய புத்தக வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறித்த சங்கத்தின் தலைவர் காமினி மொரகொட தெரிவித்தார்.

இதேவேளை பாட நூல்களுக்கான 18 வீத வெட் வரி அடுத்த ஆண்டு நீக்கப்படுமெனவும் ஜனாதிபதி வரவு செலவு திட்ட உரையின் போது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அப்பியாசக் கொப்பிகளின் விலைகளை எதிர்வரும் முதலாம் திகதி முதல் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய புத்தக வர்த்தக சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.