Thursday, November 26, 2026

18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கம்

1 min read

நாட்டின் 18 மாவட்டங்களில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (26) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் சில பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா, புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனுராதபுரம், பதுளை, காலி, மன்னார், மாத்தறை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடற்பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.