Thursday, November 12, 2026

அனுராதபுரம் ருவன்வெலிசாய அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட  காஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் கைது!

1 min read · 11 reads
அனுராதபுரம் ருவன்வெலிசாய (Ruwanwelisaya) அருகே சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொடை காஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள், போராட்ட இடத்தில் இன்று (12) ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சத்தியாக்கிரகப் போராட்ட இடத்தில் இருந்த பலாங்கொடை காஸ்ஸப தேரர் உள்ளிட்ட தரப்பினருக்கும், ராஜாங்கனயே சத்தாரத்ன தேரர் மற்றும் பொதுமக்கள் சிலர் அடங்கிய மற்றொரு குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனுராதபுரம் புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே பலாங்கொடை காஸ்ஸப தேரர் மற்றும் இரண்டு பிக்குகள் ருவன்வெலிசாய அருகே சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.