Thursday, November 12, 2026

இன்றும் 100 மி.மீ மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு

1 min read · 6 reads

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் இன்று (12) பிற்பகல் வேளையில் 100 மி.மீ க்கும் அதிக அளவிலான பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியமுள்ளது. இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டைச் சுற்றியுள்ள கடல் பிரதேசங்களில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 20-30 கி.மீ வரை காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.