Tuesday, November 10, 2026

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போரை முடிவுக்குக் கொண்டுவர நிபந்தனைகளை விதிக்கும் தெஹ்ரான்!

1 min read · 9 reads
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ராஜதந்திர முயற்சிகள் தீவிரம் பெற்றுள்ள நிலையில், சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன் வாஷிங்டன் தனது ஏழு நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என தெஹ்ரான் தொடர்ந்து கோரி வருகிறது.
போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானின் 7 நிபந்தனைகள் என்னென்ன?
அனைத்து முனைகளிலும், குறிப்பாக லெபனானில் இராணுவ மற்றும் விரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
  • பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஈரானிய முடக்கப்பட்ட நிதி விடுவிக்கப்பட வேண்டும்.
  • ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை முடிக்கப்பட வேண்டும்.
  • ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது நிறுத்தப்பட வேண்டும்.
  • “எங்கள் புரட்சியின் எதிரிகளுடன்” அமெரிக்கா மேற்கொண்டுவரும் ஒத்துழைப்பு முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
  • ஈரானிய  மீது அமெரிக்கா நடத்தும் அனைத்துத் தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும்.
  • பொருளாதாரத் தடைகள் முழுமையாக விலக்கப்பட வேண்டும்.