Tuesday, November 17, 2026

ஈழத்தமிழர்களின் ஜனநாயகக் குரலாக ஒலித்த எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு மு. தமிமுன் அன்சாரி ஆழ்ந்த இரங்கல்!

1 min read · 3 reads
இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவருமான எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவுக்கு, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு. தமிமுன் அன்சாரி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
“இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், அந்தப் பதவியில் இல்லாத போதும் ஈழத் தமிழர்களின் நலன்களுக்காகக் கடுமையாக உழைத்தவர் எம்.கே. சிவாஜிலிங்கம். ஈழத் தமிழர்களின் ஜனநாயகக் குரலாக எதிரொலித்த அவரின் மரணச் செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைகிறோம்.\
அவர் சென்னைக்கு வந்திருந்தபோது, அவருடன் ஒரு கருத்தரங்கில் பங்கேற்ற நினைவுகள் என்றும் மறக்க முடியாதவை. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஈழத் தமிழ் உணர்வாளர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனஇவ்வாறு மு. தமிமுன் அன்சாரி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.