Tuesday, November 17, 2026

LAUGFS எரிவாயு விலை உயர்வு தொடர்பில் அதிகார சபை விசாரணை!

1 min read · 12 reads

AUGFS எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் விளக்கம் கோருவதற்காக, அந்நிறுவனப் பிரதிநிதிகளை நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபை அழைத்துள்ளது.

இதற்கமைய, LAUGFS எரிவாயு நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (16) நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபைக்கு வருகை தந்துள்ளனர்.

எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் விசாரணை நடத்தி, அதற்கான காரணங்களை கேட்டறியும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 13ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் LAUGFS நிறுவனம் எரிவாயு விலைகளை அதிகரித்திருந்தது.

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 6,740 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.