போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாஷிக்கின் தடுப்புக் காவல் 90 நாட்களுக்கு நீடிப்பு
போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாஷிக்கின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
மத்திய குற்ற விசாரணை பிரிவு நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைக்கமைய இந்த தடுப்புக் காவல் காலம் குறித்தான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாரியளவில் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் ஷிரான் பாஷிக் கடந்த மார்ச் மாதம் டுபாயில் கைதுசெய்யப்பட்டு ஓகஸ்ட் 14ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் குற்றப் புலனாய்வு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.