Tuesday, November 10, 2026

சமூக ஒழுக்க மேம்பாட்டில் பாடசாலையும் பள்ளிவாசலும் இணைந்து செயற்பாடுகளை முன்னெடுக்கும் அல்-பத்ரியாவின் முன்மாதிரியான சேவை

1 min read

இன்றைய மாணவ சமூகம் எதிர்நோக்கியிருக்கும் பிரதான சவாலான ஒழுக்க வீழ்ச்சியைத் தடுத்து, சமூகத்தின் பல தரப்பினருடனும் இணைந்து செயற்படுவதன் மூலமும், ஒழுக்கத்தைப் பாதுகாப்பதன் மூலமும் முன்மாதிரியான விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.

அந்த வகையில், மாணவர்களின் ஒழுக்க மேம்பாட்டில் பாடசாலையும் பள்ளிவாசல்களும் இணைந்து செயற்படுவதன் தேவை” எனும் கருப்பொருளில் விசேட ஒன்று கூடல் ஒன்று கடந்த [07] சனிக்கிழமை  கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் திரு. எம்.ஏ.எம்.எம். அஸ்மிர் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் பிரதேசத்தின் ஜும்ஆ பள்ளிவாசல்களின் நிருவாக சபை உறுப்பினர்கள், பிரதேசத்தின் ஜம்இய்யதுல் உலமாக கிளை உறுப்பினர்கள், பாடசாலையின் நிருவாகத்தினர், அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
பிரதேச மாணவர்களின் ஒழுக்க மேம்பாட்டில் பாடசாலையோடு பள்ளிவாசல்கள் இணைந்து செயற்படுவதன் காலத்தின் கட்டாயத் தேவை பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், பள்ளிவாசல்கள் ஊடாக மாணவர்களுக்காக மேற்கொள்ளவுள்ள செயற்றிட்டங்கள் குறித்தும் தீர்மானங்கள் எட்டப்பட்டன.
மாணவர்களின் மேம்பாட்டுக்காக அனைத்து பள்ளிவாசல் பிரதிநிதிகளும் வேற்றுமைகளை மறந்து சமூக நோக்கத்துக்காக ஓரிடத்தில் ஒன்றிணைந்தமை உண்மையில் பாராட்டத் தக்க விடயமாகும்.
இவர்கள் அனைவருக்கும் பாடசாலை நிருவாகம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது. அத்துடன் இச் செயற்றிட்டங்கள் வெற்றிகமரமாக இறை அருளால் கொண்டுசெல்லப்படுவதற்கு அனைவரது தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் அன்புடன் வேண்டி நிற்கின்றது.