Sunday, November 22, 2026

நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் சாத்தியம்

1 min read · 7 reads

நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலை நேரத்தில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் காலை வேளiயில் பனிமூட்டமான வானிலை நிலவும்.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.