நாட்டில் சில இடங்களில் மாலை வேளைகளில் மழை பெய்யக்கூடும்
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கையைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவும்.
இலங்கையைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் வடகிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து காற்று வீசக்கூடும்.
காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வரை காணப்படும்.
இலங்கையைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.