பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் ஏற்பாடுகள் புதிய சட்டமூலத்தில் இல்லை: நாடாளுமன்றத்தில் விஜித ஹேரத் விளக்கம்!
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் ஏற்பாடுகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தில்’ உள்ளடக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்துக் கொண்டு, பூகோள ரீதியிலான பயங்கரவாத சவால்களை எதிர்கொள்ளும் வகையிலேயே புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ள திருத்தங்கள் அனைத்தும் குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்படும் எனவும் அமைச்சர் விஜித்த ஹேரத் சபையில் உறுதிப்படுத்தினார்.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.