பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பஹ்ரைனில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் விசேட அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது.
பஹ்ரைன் அதிகாரிகளால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ வழிகாட்டல்கள் மற்றும் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து அவதானித்து, உரிய பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு பஹ்ரைனில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களிடமும் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், அவசர உதவிகள் தேவைப்படும் இலங்கையர்கள் தொடர்புகொள்வதற்கான அவசர தொலைபேசி இலக்கங்களையும் தூதரகம் வெளியிட்டுள்ளது.
அவசர தொடர்பு இலக்கங்கள்:
-
அவசர தொலைபேசி இலக்கம்: (+973) 3353 0290
-
G.M.D. தரங்கிகா (இணைப்பாளர்): (+973) 3597 0290 / (+973) 3510 6301
-
கோதாமி (Labour Clerk): (+973) 3371 2875
உத்தியோகபூர்வ தகவல் வழிகளைத் தொடர்ந்து அவதானித்து, அவசர நிலைமைகளின்போது இலங்கைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறும் பஹ்ரைனில் வசிக்கும் இலங்கையர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.