வாக்காளர் பட்டியலிலிருந்து பாபர், ஔரங்கசீப் பெயர்களை நீக்க வேண்டும்: ஹிமந்த பிஸ்வா சர்மா பேச்சு!
பீகாரில் நடைபெற்ற பா.ஜ.க பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, வாக்காளர் பட்டியலிலிருந்து முகலாய மன்னர்களான பாபர் மற்றும் ஔரங்கசீப் பெயர்களுடன் தொடர்புடைய பெயர்களை நீக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு (SIR) குறித்து எழுப்பி வரும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய அவர், வாக்காளர் பட்டியலிலிருந்து இதுபோன்ற பெயர்களை நீக்குவது முறைகேடு அல்ல என்று கூறினார்.
அதேவேளையில், நாடு முழுவதிலும் உள்ள இஸ்லாமிய வாக்காளர்களின் பெயர்கள் பெருமளவில் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் சூழலில், அசாம் முதல்வரின் இந்தப் பேச்சு மேலும் சர்ச்சையையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.