விபச்சாரத்துக்கு தூண்டுதலாக அமையும் ஸ்பா (Spa) நிலையங்களை மூடுவதற்கு புத்தளம் மாநகர சபை தீர்மானம்

Date:

புத்தளம் மாநகர சபையின் நேற்றைய (24) அமர்வின்போது, மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

குறிப்பாக, மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ‘ஸ்பா’ (Spa) என்ற பெயரில் இயங்கி வரும், விபச்சார நடவடிக்கைகளுக்குத் தூண்டுதலாக அமையும் நிறுவனங்களுக்கான அனுமதியை நிறுத்துவதற்கு சபை தீர்மானித்துள்ளது.

பிரதேசத்தில் அதிகரித்து வரும் இத்தகைய சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முடிவு வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

அத்துடன், எதிர்வரும் பெருநாள் சந்தையைத் திட்டமிட்ட முறையில் விரிவாக்கம் செய்வது, கொழும்பு முகத்திடல் கடற்கரைப்பகுதியை அபிவிருத்தி செய்வது மற்றும் மாநகர சபை ஊழியர்களுக்கான முறையான குடியிருப்புத் திட்டத்தை முன்னெடுப்பது உள்ளிட்ட தீர்மானங்களும் இக்கூட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்டதாக மாநகர சபை உறுப்பினர் இப்லால் அமீன் தெரிவித்துள்ளார்.

(Facebook)

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...