கத்தாரிலுள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்

Date:

தற்போதைய பிராந்திய பாதுகாப்பு நிலவரங்களைக் கருத்திற்கொண்டு, கத்தாரில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் அனைவரும் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள்,

பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழலை இலங்கை தூதரகம் கூர்ந்து கவனித்து வருகின்றது. வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், கத்தார் அதிகாரிகளினால் வெளியிடப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (Website), முகநூல் (Facebook) மற்றும் எக்ஸ் (X) தளங்களில் உடனுக்குடன் பகிரப்படும் தகவல்களைத் தொடர்ந்து அவதானிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தனது நாட்டின் அனைத்து வங்கிகளிலும் வட்டி சார்ந்த கொடுக்கல் வாங்கல்களை முழுமையான நிறுத்திய ஆப்கானிஸ்தான்.

ஆப்கானிஸ்தானில் பல தசாப்தங்களாக நடைமுறையிலிருந்த வட்டி அடிப்படையிலான வங்கி முறையை அதிகாரப்பூர்வமாக...

முடியும் தறுவாயில் அமெரிக்கா – ஈரான் போர்: டிரம்ப்

அமெரிக்கா - ஈரான் இடையே போர் முடிவுக்கு வரும் தறுவாயில் இருப்பதாக ...

இலங்கையில் தங்கவைக்கப்பட்டிருந்த 236 ஈரான் கடற்படையினர் நாடு திரும்பினர்

இலங்கையின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த மொத்தம் 240 வீரர்களும்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின் மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மாகாணங்களிலும்...