மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

Date:

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாத்தறையில் செய்யப்பட்டுள்ளன.

 “வளமான நாட்டின் பெருமை அவள் – தேசத்தின் முன்னோடி” எனும் கருப்பொருளின் கீழ், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ருஹுணு பல்கலைக்கழகத்தில் இது நடைபெறவுள்ளது.

இலங்கை மகளிர் பணியகத்துடன் இணைந்த மகளிர் அமைப்புகளின் சுமார் 1500 உறுப்பினர்களின் பங்கேற்புடன் இது நடைபெறவுள்ளது.

இதேவேளை, சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் நாளை (8) கொழும்பு பி.டி. சிறிசேன விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் பங்கேற்புடன் இது நடைபெறவுள்ளது. தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழா நாளை (8) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...