லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

Date:

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கொழும்பு மாவட்டத்தில் அதன் புதிய விலை 4,330 ரூபாவாக உயர்ந்துள்ளது.

அதேநேரம், 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,862 ரூபாவாக உயர்ந்துள்ளது.

உலகளாவிய புவிசார் அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் சர்வதேச எரிசக்தி சந்தைகளைப் பாதிக்கும் தொடர்ச்சியான மோதல்கள் காரணமாக விலை திருத்தம் அவசியமானது என்று நிறுவனம் கூறியது.

அதேநரேம், நாடு தழுவிய விநியோக வலையமைப்பு மூலம் தடையற்ற சேவையைப் பேணுவதோடு, இலங்கை முழுவதும் உள்ள வீடுகளுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் உயர்தர எரிவாயுவை தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதில் உறுதியாக இருப்பதாக லாஃப்ஸ் கேஸ் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக லிட்ரோ கேஸ் நிறுவனமும் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...

இலங்கையில் காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 7,000 பேர் மரணம்!

வளிமண்டலக் காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 7,000 மரணங்கள்...