அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

Date:

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று (12) கொழும்பு, அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது. இதில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்:

முக்கிய உரை  சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் மொஹமட் முனீர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன. வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம். கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரியாஸ் பாரூக் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் மதத் தலைவர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்விற்கு பூரண அனுசரணையினை குளோபல் இஹ்ஸான் ரிலீப் நிறுவனத்தினர் வழங்கி இருந்தனர்.

நாட்டின் இன நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கோடும், ஊடகவியலாளர்களுடனான உறவை வலுப்படுத்தும் வகையிலும் இந்த இப்தார் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...