நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

Date:

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை...

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச்...

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று...