வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் நாளை (19) முதல் எரிபொருள் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் இரட்டை எண் அல்லது பூச்சியம் (0) ஆக இருந்தால் இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளில் எரிபொருள் விநியோகிக்கப்படும்.
ஏனைய வாகனங்களுக்கு (கடைசி இலக்கம் ஒற்றை எண் எனின்) ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளில் எரிபொருள் விநியோகிக்கப்படும்.
