உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கிளிநொச்சியைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார்.
இயற்பியல், இரசாயனவியல், இணைந்த கணிதம் பாடங்களில் ஏ சித்திகளைப் பெற்றுள்ள அவர் பொதுஅறிவு பரீட்சையில் 80 புள்ளிகளையும், பொது ஆங்கிலம் பாடத்தில் பீ சித்தியையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாவட்ட மட்டத்தில் முதலிடத்திலும், அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடத்தையும் திருக்குமரன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
