இன்றிலிருந்து பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் இடியுடன் மழை!

Date:

இன்றிலிருந்து (02) எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றையதினம் (02) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் குருணாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

தென் மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மொணராகலை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேல், சப்ரகமுவ, தென், வடக்கு, கிழக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும் மொணராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பக் குறிகாட்டி, அதாவது மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையானது ‘எச்சரிக்கை மட்டம்’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே தேவையின்றி வெளியில் நடமாடுவதைக் குறைப்தோடு, போதியளவில் நீரை உள்ளெடுத்தல் உள்ளிட்ட போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 

Popular

More like this
Related

ஹஜ் பெருநாள் எதிரொலி: மேற்கு வங்க பாரதிய ஜனதா கட்சி அரசின் புதிய கால்நடை கட்டுப்பாடுகளால் இந்து வியாபாரிகள் கடும் கடன் சுமை!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி...

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு பிணையில் செல்ல அனுமதி

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தலங்கம பொலிசாரினால் இன்று...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள்

எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு...

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இலவச விசா !

குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா...