24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

Date:

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (02) முதல் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது.

 

நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் பகுதிகள் தொடர்பில் குறுஞ்செய்திகள் மூலம் முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்த அறிவிப்பின்படி, பாதுக்கை, ஹோமகமை மற்றும் பெலன்வத்தை ஆகிய பகுதிகளில் வெவ்வேறு நாட்களில் 24 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.

பாதுக்கவில் இன்று (02) இரவு 8.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

அதேநேரம், ஹோமகமையில் நாளை (03) 8.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

பெலன்வத்தையில் சனிக்கிழமை (04) இரவு 8.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீர்வெட்டு வெட்டு அமுலில் இருக்கும்.

தற்போது இலங்கையைப் பாதிக்கும் வறண்ட வானிலை காரணமாக, கலதுவாவ மற்றும் லபுகம நீர்த்தேக்கங்களில் நீர் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக இந்த நீர்வெட்டுக்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.

இதேவேளை, தொடர்ந்து நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையைக் கண்காணித்து நிர்வகிப்பதற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் மற்றும் பொது முகாமையாளரினால் ஒரு சிறப்புச் செயல்பாட்டுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 

சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கொண்ட இந்தக் குழு, தற்போதுள்ள நீர் ஆதாரங்கள், உற்பத்தித் திறன்கள் மற்றும் விநியோக முறைகளை தொடர்ந்து கண்காணிக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...

இன நல்லிணக்கத்தை நோக்கிய பயணம்: நிதா அறக்கட்டளையின் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி!

நாட்டில் இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும், மத நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில், நிதா...