கொழும்பு மாவட்டத்தில் இன்று திட்டமிடப்பட்ட நீர் வெட்டுகள்!

Date:

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (3) நீர் விநியோகத் தடைகள் தொடரும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.

NWSDB நேற்று (02)  வெளியிட்ட அறிக்கையின்படி, கலதுவாவ மற்றும் லபுகம நீர்த்தேக்கங்களினால் பயனடையும் பாதுக்கை, ஹோமாகமை, பெலன்வத்தை மற்றும் பன்னிப்பிட்டிய உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடை செய்யப்படும்.

குறித்த பகுதிகளில் வெவ்வேறு நாட்களில் 24 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.

பாதுக்கவில் நேற்றிரவு (02) இரவு 8.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தது.

ஹோமகமையில் இன்று (03) இரவு 8.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

பெலன்வத்தையில் நாளை (04) இரவு 8.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீர்வெட்டு வெட்டு அமுலில் இருக்கும்.

இந்த சுழற்சி முறையிலான நீர் வெட்டுக்கள் பதுக்கவில் ஏப்ரல் 7, ‍ஹோமாகமையில் ஏப்ரல் 8, பெலன்வத்தையில் ஏப்ரல் 9 ஆகிய திகதிகளிலும் அமுல்படுத்தப்படும்.

அதேநேரம், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, கொழும்பின் பல பகுதிகளில் ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 10 வரை மூன்று மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்த அறிவிப்பின்படி, பாமன்கடை, பத்தரமுல்லை, வெள்ளவத்தை, நாவல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 1.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

குறைந்த அளவு தண்ணீர் விநியோகத்தை நிர்வகிப்பதற்காக இந்த தற்காலிக தண்ணீர் வெட்டுகள் அமல்படுத்தப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் இக்காலகட்டத்தில் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும், தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பற்றாக்குறை தொடர்வதால், பொதுமக்கள் தண்ணீரைச் சேமிக்குமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அரச செலவுகளை முகாமைத்துவம் செய்ய சுற்றுநிரூபம்!

மத்திய கிழக்கு  போர்ச் சூழலினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தணித்து,...

“ஹார்முஸ் நீரிணை ஈரான் ஒத்துழைப்புடன் மட்டுமே திறக்கப்பட வேண்டும்”: பிரான்ஸ் ஜனாதிபதி

சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் பிரான்ஸ்...

மக்காவில் உள்ள ராபிதாவின் அனுசரணையில் உயர்கல்வி கற்ற இரட்டை சகோதரிகளுக்கு உயர்தரப் பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகள்

இம்ரான் ஜமால்தீன் பணிப்பாளர், ராபிதாவுக்கான (MWL) இலங்கை பிரதிநிதி. மக்காவில் உள்ள ராபிதாவின் (MWL) அனுசரணையில்...

எரிபொருள் தட்டுப்பாட்டால் மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம்: ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மாற்றம்!

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள்...