புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

Date:

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிமித்தம் கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட பஸ் சேவையை எதிர்வரும் 9ஆம் திகதி முதல் ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது.

இதன்கீழ் நாளாந்தம் மேலதிகமாக 250 பஸ்கள் தூர இடங்களுக்காக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், தேவையேற்படின் மேலதிக பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட சேவை ஏப்ரல் 13 வரை நடைமுறையில் இருக்கும். மீண்டும் கொழும்பு திரும்புவோருக்காக ஏப்ரல் 17 முதல் 21 வரை விசேட பஸ் சேவைகள் இடம்பெறும்.

அத்துடன், ஏப்ரல் 10 முதல் விசேட புகையிரத சேவைகளை முன்னெடுக்க புகையிரத திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

Popular

More like this
Related

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பு: நாடு முழுவதும் 18 புதிய கோல்போஸ்கோபி இயந்திரங்கள் வழங்கிவைப்பு!

இலங்கையில் ஐந்தாவது பொதுவான புற்றுநோயான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்கும், அது...

விமல் வீரவன்ச கைது

இராணுவ வீரர் நினைவு தின நிகழ்விற்கான ஒத்திகை செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த...

வித்தியா கொலை வழக்கின் தண்டனை கைதி தற்கொலை

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை நியமிக்கப்பட்ட...