சூரியனின் வடதிசை நோக்கிய நகர்விற்கு அமைவாக, ஏப்ரல் 05 முதல் 15 ஆம் திகதி வரை இலங்கையின் சில பகுதிகளுக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று (ஏப்ரல் 07) நண்பகல் 12:13 மணியளவில் பின்வரும் பிரதேசங்களுக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும். தெஹிவளை, மகரகம, பன்னிப்பிட்டிய, பாதுக்க, எஹெலியகொட, மஸ்கெலியா, சியம்பலாண்டுவ மற்றும் பொத்துவில்.
சூரியன் உச்சம் கொடுக்கும் வேளையில், இந்தப் பகுதிகளில் நண்பகல் வேளையில் நிழல்கள் மிகக் குறைவாகக் காணப்படும் என்பதுடன், பகல் நேர வெப்பநிலை உயர்வாகவும் இருக்கக்கூடும்.
சூரியனின் வடநோக்கிய நகர்விற்கு ஏற்ப, ஏப்ரல் 15 ஆம் திகதி வரை நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு இவ்வாறு சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
