கூட்டுச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சமூக-கலாசார பிணைப்புடன் இந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துகள்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

Date:

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டானது, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்து செய்தியில் தெரிவித்துள்ளார்

பாரம்பரிய சம்பிரதாயங்களைப் பாதுகாத்து, சுபநேரச் சடங்குகளுக்கும் சமயக் கிரியைகளுக்கும் முன்னுரிமை அளித்து, கூட்டாக ஒரே சுபநேரத்தில் சிங்கள தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்பாட்டுப் பகிர்வு உலகிற்கு முன்னால் எமது நாட்டின் அடையாளத்தையும், எமது சமூகங்களுக்கு இடையே நிலவும் சமூக-கலாசார பிணைப்பையும் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது.

நாட்டின் எதிர்கால அபிவிருத்திப் பாதையை, இந்த பெறுமதிமிக்க கலாசாரம் மற்றும் உன்னதமான வரலாற்று மரபுரிமைகளுடன் இணைந்தே தெரிவு செய்ய முடியும் என நாம் உறுதியாக நம்புகின்றோம். அதற்கமைய, எமது அனைத்து எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களும் அந்த பெறுமதியான மரபுரிமைகள் மற்றும் கலாசாரத்தின் மீது வலுவாக உருவாக்கப்பட்டுள்ளன என்பதை இங்கு நினைவுபடுத்த வேண்டும்.

அதேபோல், சூரிய பெயர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அனைத்துச் சடங்கு முறைகளின் பொதுவான எதிர்பார்ப்பானது, கூட்டுப்பண்பை மதிக்கும், பிறரையும் இயற்கையின் இருப்பையும் கௌரவிக்கும் ஒரு புதிய மனிதனை உருவாக்குவதாகும். புத்தாண்டின் சடங்கு முறைகளில் வெளிப்படும் கூட்டுப்பண்பின் குணாதிசயங்களும் விழுமியங்களும் அந்த சில நாட்களுக்கு மாத்திரமன்றி, முழு வருடமும் எமது நடத்தைகளில் பிரதிபலிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

கடந்த வருடம் முகங்கொடுத்த பாரிய இயற்கை அனர்த்தத்தின் போது உள்ளக அதிர்வுகளுக்கு தாக்குப் பிடிக்கும் இயலுமையை உலகிற்கு காண்பித்தோம். மத்திய கிழக்கு பிராந்தியத்தின் போர்ச் சூழல் நிலைமையில் ஏற்பட்டுள்ள வெளிப்புறச் சவால்களை வெற்றிகொள்வதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது.

நாடென்ற வகையில் ஒன்றாக இந்த சவால்களை வெற்றிகொள்கையில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் வெளிப்படுத்தப்படும் கூட்டுப்பண்பு மற்றும் பகிர்ந்துகொள்ளல் போன்ற பண்புகளினால் எமது வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் அவர் தனது வாழ்து செய்தியில் தெரிவிதார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...