மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

Date:

மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து நாளை (21) முதல் விசேட தாழ்தளப் பேருந்து சேவைகளை ஒரு முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள இந்த வேலைத்திட்டமானது, ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் 430.7 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அனைவருக்கும் சமமான வாய்ப்பு மற்றும் மனித கண்ணியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் முதற்கட்டமாக,  10 நவீன குளிரூட்டப்பட்ட தாழ்தளப் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இப்பேருந்துகள் குறிப்பாக சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி இலகுவாக ஏறி இறங்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

33 இருக்கை வசதிகளைக் கொண்ட இப்பேருந்துகளில் ஒரே நேரத்தில் 80 பயணிகள் வரை பயணிக்க முடியும் என்பதுடன், பயணிகளின் பாதுகாப்பிற்கான விசேட அம்சங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தச் சேவையானது மாகும்புரவிலிருந்து கோட்டை வரையிலும், மாகும்புரவிலிருந்து கடவத்தை வரையிலும் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், காலை மற்றும் மாலை வேளைகளில் நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும், இந்த போக்குவரத்து வலையமைப்பானது மகரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையவுள்ளதால், சிகிச்சைகளுக்காக செல்லும் நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் இது பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...