அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்வதற்கு வந்த புதிய மக்கள் முன்னணி தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட தரப்பினருக்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குறித்த கட்சியின் தலைவர் உள்ளிட்ட ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு கூடிய மக்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு மக்கள் கோசமிட்டனர். இதனையடுத்து குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்ப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றிய சுகீஸ்வர பண்டார மீது மக்கள் முட்டை மற்றும் சாணத்தை வீசி எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதுடன் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
