மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

Date:

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று (06) நடைபெறவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இன்று முற்பகல் 8.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை இது தொடர்பான வாய்மூலக் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

2026 ஆம் ஆண்டின் 2 ஆம் மற்றும் 3 ஆம் காலாண்டுகளுக்காக ‘தேசிய அமைப்பு இயக்குனரால்’ (National System Operator Private Company) முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பிலேயே இந்த ஆலோசனைகள் பெறப்படவுள்ளன. திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணங்கள் குறித்த இறுதித் தீர்மானம் மே மாதம் 9 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

Popular

More like this
Related

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்!

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்...

பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள...

ரோஹிங்கியா மக்களின் மோசமடைந்து வரும் அவலநிலையை உரையாற்ற சர்வதேச கவனம் தேவை: ஐ.நா. கோரிக்கை!

மியான்மர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் உள்ள அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த...

கல்வியால் மறுமலர்ச்சி பெறும் கிராமங்கள்:தெல்தோடைக்கு பெருமை சேர்த்த மூன்று இளம் மருத்துவர்கள்!

கல்வியின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் வகையில், தெல்தோடை மண்ணைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்களின்...