‘ஒரு தலைவராகவும் மனிதராகவும் ஒருங்கே வாழ்ந்தவர் இஸ்லாத்தின் இறைத்தூதர்’: இன்றைய மீலாத் சிந்தனைகள்!

Date:

பேராசிரியர் வதா கான்ஃபர்,
சிந்தனையாளர்.

நபிகளாரின் வாழ்க்கையில் இரு பெரும் பரிமாணங்கள் அல்லது அவரது ஆளுமையின் இரு பக்கங்கள் காணப்படுகின்றன. அதில் தலைவரும் மனிதரும் ஒன்றாகவே இணைந்திருந்தனர்.

நபிகளாரின் இந்த இரு பக்கங்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதற்கான எந்தக் காரணத்தையும் நான் காணவில்லை. உதாரணமாக, “ஒரு தலைவராக நபியவர்களின் அணுகுமுறை, வீட்டின் உள்ளே மற்றும் குடும்பத்தினருக்கு மத்தியில் ஒரு மனிதராக நபியவர்கள் நடந்துகொண்ட முறையிலிருந்து வேறுபடவில்லை” என்று கூற முடியாது.

ஏனெனில், அரசியல் நடைமுறைவாதத்தில் (Political Pragmatism) அரசியல்வாதிகள் மற்றும் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பொதுவாழ்க்கையையும் பிரிக்க வேண்டும் என்றே நாம் வழக்கமாகக் கூறுகிறோம். அதற்குச் சொல்லப்படும் காரணம் என்னவென்றால்:

ஒரு மனிதன் தனது சொந்த வீட்டில், தனது குடும்பத்தாரிடம் அதிக அளவிலான தனிப்பட்ட சுதந்திரத்தைப் பெற வேண்டிய இயல்புடையவன்; எனவே, அதை மற்றவர்கள் எட்டிப்பார்க்கவோ தலையிடவோ உரிமையில்லை.

ஒரு அரசியல்வாதி தனது பொதுச் செயல்பாடுகளில் பல்வேறு விதிகள் மற்றும் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்; அவரது பதிவுகள் வெளிப்படைத்தன்மையுடனும், கணக்குக் கேட்கப்படக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

ஆனால், நபிகளார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இந்த விவகாரம் மிகவும் மாறுபட்டது. அதற்கு ஒரு முக்கியக் காரணம் உள்ளது: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அனைத்துக் காரியங்களிலும் நம் அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கல்வியால் மறுமலர்ச்சி பெறும் கிராமங்கள்:தெல்தோடைக்கு பெருமை சேர்த்த மூன்று இளம் மருத்துவர்கள்!

கல்வியின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் வகையில், தெல்தோடை மண்ணைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்களின்...

நெருக்கடிகள் நிறைந்த தற்போதைய உலகிற்கு நபிகளாரின் தத்துவம் மிகவும் அவசியம்: பிரதமரின் மீலாதுன் நபி தின செய்தி

நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்தப் புனிதமான தருணத்தில், இந்த...

நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரியைப் பின்பற்றுவோம்:மீலாதுன் நபி தினத்தில் ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி

நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரி, அர்ப்பணிப்பு மற்றும் மேலான முயற்சிகளை உண்மையாக அர்த்தமுள்ளதாக்கி,...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...