கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்து அவமதித்த இஸ்ரேல் வீரர்:

Date:

லெபனான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்த சூழலில் லெபனானில் நிலை கொண்டுள்ள இஸ்ரேல் படை வீரர்கள் லெபனானில் உள்ள பொதுமக்களின் சொத்துக்களை சேதப்படுத்துவதும், கொள்ளையடிப்பதும் தொடர்பான வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

அண்மையில் லெபனானின் தபெல் நகரில்  இராணுவ சீருடையுடன் வீரர் ஒருவர் இயேசு கிறிஸ்து சிலையை அடித்து உடைத்த வீடியோ வைரலானது.

இந்நிலையில் அதே தபெல் நகரில்  இராணுவ வீரர் ஒருவர் கன்னி மரியாளின் சிலையை அவமதிக்கும் புகைப்படம் வெளியாகி சர்வதேச அளவில் கண்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு புகைப்படத்தில், இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவர் கன்னி மரியாள் சிலையின் வாயில் சிகரெட்டை வைத்து அவமதிப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

சம்பந்தப்பட்ட வீரர் அடையாளம் காணப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இஸ்ரேல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இது பல்கலைக்கழக...

அஸ்வெசும விபரங்களை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

கடந்த 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘அஸ்வெசும’ (Aswesuma) நலன்புரித் திட்டத்துடன் தொடர்புடைய...

கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு !

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை...