பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு: பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த தீர்மானம்

Date:

இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் நய்யார் நசீர் (ஓய்வு), மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று (11) கொழும்பில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

உயர் ஸ்தானிகர் நய்யார் நசீரின் இலங்கைப் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள், இராணுவப் பயிற்சி வாய்ப்புகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஒருமைப்பாடு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அனர்த்தங்கள் தற்போது தேசிய பாதுகாப்பின் ஒரு அங்கமாக மாறியுள்ளதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். இதற்கு தொழில்நுட்ப ரீதியான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பதிலளிப்பு அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் கடல்சார் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த மேலதிக தொழில்நுட்ப உதவிகள் மற்றும் சர்வதேச கூட்டாண்மை தேவை என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

“இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்று ரீதியான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தி, தொடர்ச்சியான தொடர்புகளை பேணுவதன் மூலம் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.”

இச்சந்திப்பில் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு ஆலோசகரும் கலந்துகொண்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்ல இச்சந்திப்பு வழிவகுத்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கை – பாலஸ்தீனம் இடையிலான நட்புறுதியை மேலும் வலுப்படுத்த இருநாடுகள் உறுதி!

இலங்கை மற்றும் பாலஸ்தீனம் இடையிலான நீண்டகால இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்தும்...

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் செப்டம்பர் 24, 25 இல்!

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிமன்ற அமைப்புகள் (திருத்த) சட்டமூலம்...

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு இரத்து!

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...

துமிந்த திஸாநாயக்கவுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்!

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்...