கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளையில் பதிவு

Date:

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) முற்பகல் 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது.

நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மை) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இது குறித்து தெரிவிக்கையில், அவிசாவளையில் 180 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதற்கு மேலதிகமாக ஏனைய பகுதிகளில் பதிவான மழைவீழ்ச்சி விபரங்கள் பின்வருமாறு, ஹன்வெல்ல: 158 மி.மீ, தெரணியகல: 122 மி.மீ

இந்தக் கனமழை காரணமாக நேற்று (14) இரவு முதல் களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து காணப்பட்ட போதிலும், அது இதுவரை அனர்த்த எச்சரிக்கை மட்டத்தை எட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அத்தனகலு ஓயாவின் தூனமலே நீர்மானி நிலையப் பகுதியிலும் அதனைச் சூழவுள்ள இடங்களிலும் 176 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

டெங்கு பரவல் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்

 மொறட்டுவை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின்...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: காயமடைந்த சிறை அதிகாரிகளை சந்தித்த அமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வரும்...

காஸாவில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால ஹமாஸ் ஆட்சி கலைப்பு: நிர்வாகப் பொறுப்பை ஏற்கிறது நிபுணர்கள் குழு!

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை கடந்த 20 ஆண்டுகளாக நிர்வகித்து வந்த தன்னாட்சி...