பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு உதவி வரும் எகிப்துக்கு  வருடாந்தம் 1.3 பில்லியன் டொலர்களை வழங்கி வரும் அமெரிக்கா

Date:

-லத்தீப் பாரூக்

எகிப்து 7500 ஆண்டுகளுக்கும் மேலான வளமான வரலாற்றைக் கொண்ட உலகின் பண்டைய நாடுகளில் ஒன்றாகும். அது நைல் நதி நாகரிகம் மற்றும் உலக அதியங்களில் ஒன்றான பிரமிட்களுக்கு பெயர் போன நாடாகும்.

பெரும்பாலும் எகிப்தை “உம்முத் துன்யா – உலகின் தாய்” என்று குறிப்பிடுகின்றார்கள். எகிப்துக்கு வந்து நைல் நதி நீரைக் குடிப்பவர்கள்   மீண்டும் மீண்டும் தமது நாட்டுக்கு திரும்பி வருவார்கள் என்று எகிப்தியர்கள் பெருமையுடன் கூறுகின்றார்கள்.

ஐரோப்பிய காலனித்துவ ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலின் மோசமான வடிவத்திற்கு உட்படுத்தப்பட்ட நாடுகளில் இதுவும் ஒன்றாகும். எகிப்திய இராணுவ அதிகாரியான கமால் அப்துல் நாசர் 1952 ஆம் ஆண்டின் எகிப்திய புரட்சியை வழிநடத்தி தொலைநோக்கு நிலச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் வரை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்த காலணித்துவ ஒடுக்குமுறை நீடித்தது.

1954 முதல் 1970 இல் அவர் இறக்கும் வரை எகிப்தின் இரண்டாவது ஜனாதிபதியாக பணியாற்றினார்.

அப்போதிருந்தே மேலைத்தேச சார்பு ஒடுக்குமுறை சர்வாதிகாரங்கள் இஸ்ரேலின் ஒடுக்குமுறை மற்றும் விரிவாக்க செயற்பாடுகளை கண்டுகொள்ளத் தவறி வந்துள்ளன. இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் சுதந்திரம் மற்றும் நீதிக் கட்சியின் சார்பாக முகமது முர்சி 2012 ஜூன் 24 அன்று எகிப்தின் சுதந்திரமான மற்றும் நியாயமான ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் வரை இந்நிலையே தொடர்ந்தது.

முஸ்லீம் சகோதரத்து இயக்கம் மேலைத்தேச நாடுகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. மதச்சார்பற்ற மற்றும் தேசியவாத கருத்துக்கள் பரவுவதை எதிர்ப்பதற்கான ஒரு இஸ்லாமிய அரசியல் இயக்கமாக இந்த சகோதரத்துவ இயக்கம் 1928 இல் எகிப்தில் நிறுவப்பட்டது.  இது விரைவாக முஸ்லீம் நாடுகளில் பரவியது. ஒரு முக்கிய அமைப்பாகவும் மாறியது. ஆனால் பெரும்பாலும் ரகசியமாகவே அது செயல்பட்டது.

எகிப்திய பள்ளி ஆசிரியராக கடமையாற்றிய அதன் நிறுவுனர் ஹசன் அல்-பன்னா சமூகத்தில் இஸ்லாமிய கொள்கைகளை புதுப்பிப்பது மேற்கத்திய காலனித்துவத்தை எதிர்க்க முஸ்லீம் உலகிற்கு உதவும் என்று நம்பினார். ஆனால் இன்று முஸ்லீம் சகோதரத்துவ இயக்கமானது எகிப்து, சவுதி அரேபியா மற்றும் இஸ்லாத்திற்கு விரோதமான பெரும்பாலான அரபு நாடுகளில் ஒரு பயங்கரவாதக் குழுவாக தடை செய்யப்பட்டுள்ளது.

எகிப்தில் முஸ்லீம் சகோதரத்துவ இயக்கம் 2013 இல் அதன் தலைவர் ஜனாதிபதி மொஹமட் முர்ஸி பதவி நீக்கம் செய்யப்பட்டது முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

அவரை பதவியில் இருந்து வீழ்த்திய இராணுவத் தலைவர் அப்தெல் பத்தா அல்-சிசி 1.3 பில்லியன் டாலர்களுக்கு தன்னை விற்றுவிட்டு இஸ்ரேலினால் கட்டுப்படுத்தப்படும் வாஷிங்டனுடன் ஒரு முக்கிய கூட்டணியை உருவாக்கியுள்ளார்.

மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட மற்றும் பிராந்தியத்தில் மிக முக்கியமான அரபு நாட்டுக்கு மொஹமட் முர்சி  ஜனநாயகத்தை கொண்டு வந்தார். எகிப்தின் சுதந்திரத்தின் காற்று மற்ற நாடுகளுக்கு பரவுவதற்கும் பிராந்தியத்தில் சர்வாதிகாரிகளை அச்சுறுத்துவதற்கும் அனைத்து சாத்தியங்களையும் அது கொண்டிருந்தது.

இஸ்ரேல் அதன் தீய நிகழ்ச்சி நிரலை ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பிரதேசங்களிலும் அதற்கு அப்பாலும் செயல்படுத்துவதில் இது   கடுமையான சவாலாக அமைந்தது.

ஜனாதிபதி முர்சி பலஸ்தீன சுதந்திரப் போராட்டத்துக்கு தனது ஒத்துழைப்பை வெளிப்படுத்தினார். மேலும் காசாவுக்கு நேரடியாகச் சென்று அங்கு மிருகத்தனமாக நடத்தப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு தனது அரசாங்கத்தின் ஆதரவை நேரடியாக வெளிப்படுத்தினார். அவர் எகிப்திய மக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் வலியுறுத்தி நின்றார்.

மேற்குலகின் கீழ்ப்படிவு மிக்க நாய் என்று எகிப்திய மதகுருவான ஷேக் அப்துர் ரஹ்மான் என்பவரால் வர்ணிக்கப்பட்டவரும் பதவியில் இருந்து மக்களால் தூக்கி எறியப்பட்டவருமான சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கின் கீழ் செழித்தோங்கிய சக்திகள், இந்த எழுச்சியால் பெரும் கலக்கம் அடைந்தன.

இது இஸ்ரேலிலும் அமெரிக்காவிலும் அவர்களின் வாடிக்கையாளர்களான அரபு சர்வாதிகாரிகள் மத்தியிலும் எச்சரிக்கை மணிகளை ஒலிக்கச் செய்தன.

ஜனநாயகமும் மக்களின் சக்தியும் என்பது சர்வாதிகாரிகளுக்கும் இஸ்ரேலுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதைக் குறிக்கின்றது.

இந்நிலையில் எகிப்தின் புதிய ஜனநாயக ஆட்சிக்கு எதிராக ஒன்று திரண்ட  அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய சதித்திட்டக்காரர்கள் தங்களின் அடிமைகளான சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத்  ஆகிய நாடுளைப் பயன்படுத்தி  அவர்கள் மூலம் பதினொரு பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடச் செய்து, எகிப்தில்  செயற்கை உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை உருவாக்கினர். இது அங்கு ஒரு மக்கள் எழுச்சிக்கு வழிவகுத்தது.

இதன் விளைவாக  ஜனாதிபதி முகமது முர்சியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு 2013 ஜூலை 3 புதன்கிழமை அன்று கவிழ்ந்தது அல்லது கவிழ்க்கப்பட்டது..

முர்ஷி பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டதை சர்வதேச பார்வையாளர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐ. நா. ஆதரவு குழுக்கள் என்பன முரட்டுத்தனமான மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான ஒரு செயல் என்று விவரித்தன. இந்த பதவி கவிழ்ப்பே பிற்காலத்தில் அவரது மரணத்திற்கும் பங்களித்திருக்கலாம்.

அரசியல் கைதிகளை குறிப்பாக இஸ்லாமியவாதிகளை முறியடிக்க வடிவமைக்கப்பட்ட எகிப்தின் தோரா சிறையின் மிக மோசமான ‘ஸ்கார்பியன்’ அதிகபட்ச பாதுகாப்பு பிரிவில் முர்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

தான் அடைக்கப்பட்ட சிறைக் கூடத்தில் தனக்கு படுக்கை இல்லை என்றும், கான்கிரீட் தரையில் தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாக முதுகு மற்றும் கழுத்துப் பகுதிகளில் பல வேதனைகளை அனிபவிப்பதாகவும் முர்சி தெரிவித்திருந்தார். முர்சி ஒவ்வொரு நாளும் 23 மணி நேரம் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார் என்று சில நிபுணர்கள் விளக்கி உள்ளனர்.

பயங்கரவாதம், உளவு பார்த்தல் மற்றும் சிறையிலிருந்து தப்பித்தல், ஆகிய குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக அவர் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தபோது மற்ற கைதிகள் எவரையும் அவர் காணக்கூட முடியாத வகையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அவர் உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்பட்டார். இருந்தும் அந்த வேளையில் கூட அவர் எவரையும் காண முடியதவாறே வைக்கப்பட்டிருந்தார்.

இந்த துயரத்துடன் சேர்த்து புத்தகங்கள், பத்திரிகைகள், எழுதும் பொருட்கள், அல்லது வானொலி ஆகியவற்றை அணுகவும் அவர் அனுமதிக்கப்படவில்லை என்று மனித உரிமைகளுக்கான சுயாதீன செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்திற்கு ஒரு,”உத்தியோகபூர்வ” தகவல் தொடர்பின் மூலம் விவரித்தனர். முர்ஸிக்கு உயிர் காக்கும் மற்றும் அவரது நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கான தொடர்ச்சியான கவனிப்பு மறுக்கப்பட்டது.

இதன் விளைவாக சிறையில் இருந்தபோது  அவர் படிப்படியாக தனது இடது கண்ணில் பார்வையை இழந்தார். தொடர்ச்சியான நீரிழிவு கோமாக்கள், மற்றும் மீண்டும் மீண்டும் மயக்க நிலை என்பனவற்றை அவர் அடைந்தார்.  இதனால் அவர் குறிப்பிடத்தக்க பல் சிதைவு மற்றும்  பல்வகையான நோய்த் தொற்றுக்களாலும் பாதிக்கப்பட்டார் .

இத்தகைய நிலைமைகள் காரணமாக முர்சியின் ஆரோக்கியம் படிப்படியாக வீழ்ச்சியடையும், என்று அதிகாரிகளுக்கு பலமுறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவரைக் கொல்லும் அளவிற்கு நிலைமை மேசடையலாம், என்று விளைவுகள் பற்றி முன்கூட்டியே கூறப்பட்டிருந்த போதிலும், இந்த கவலைகளை நிவர்த்தி செய்ய எகிப்தின் அரச அதிகாரிகள் செயல்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

முர்சி தனது உயிருக்கு பயந்ததால் சிறை உணவை தவிர்த்தார், என்றும் டின்னில் அடைக்கப்பட்ட உணவை மட்டுமே நம்பியிருந்தார், என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகின்றது. அவருக்கு எதிரான பல்வேறு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் அவரது தடுப்புக்காவல் நிலைமைகள் எவ்வாறு உள்ளன என்பது குறித்த விசாரணைகளுக்கு ஒருபோதும் உத்தரவிடவில்லை. சந்திப்புகளுக்கு அவருக்கு அனுமதி அளிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் பாதுகாப்பு அதிகாரிகள் நீதிபதிகளின் உத்தரவுகளை அலட்சியம் செய்து புறக்கணித்து வந்தனர்.

இராணுவ சகிகாரக் கயவன் அல்-சிசி, அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் அவர்களின் அரபு அடிமைகளின் ஆதரவுடன் முர்சியை வெளியேற்றியதிலிருந்து அரசியல் எதிர்ப்புக்களை அடக்கி,   நீதித்துறையை நசுக்கி, பலவீனப்படுத்தி, முந்தைய ஆட்சிகளை விடவும் மிகவும் மோசமான விதத்தில் கடுமையான சட்டங்களை அமல்படுத்தி, தனது அதிகாரத்தை ஒருங்கிணைத்து தக்க வைத்துள்ளார்.

அதிருப்தியாளர்களின் எதிர்ப்பு இயக்கங்களை சிசி முற்றாக நசுக்கி உள்ளார். இன்று எகிப்து அப்தெல் பத்தா அல்-சிசியின் கீழ் ஒரு சர்வாதிகார ஆட்சியால் நிர்வகிக்கப்படுகின்றது. இன்றைய எகிப்து பெரும்பாலும் முந்தைய ஆட்சிகளை விட மிகவும் அடக்குமுறையான “அச்சத்தின் குடியரசு” என்று வர்ணிக்கப்படுகின்றது.

இந்த அடக்குமுறைக்கு எதிரான பிரசாரம் ஆரம்பத்தில் முஸ்லீம் சகோதரத்துவ இயக்கத்தின் உறுப்பினர்களுடன் 2011-2012 எதிர்ப்பு இயக்கத்தோடு தொடங்கியது.

ஆனால் பின்னர் பல மதச்சார்பற்ற சக்திகள், அதிருப்தியாளர்கள், சுயாதீன பத்திரிகையாளர்கள்,மற்றும் கால்பந்து ஆதரவாளர்கள் உட்பட சமூகத்தின் பல பிரிவுகளுக்கு இது விரிவுபடுத்தப்பட்டது.

ஏறக்குறைய எல்லா எதிர்ப்புகளும் முபாரக் சகாப்தத்தின் சர்வாதிகாரத்திலிருந்து ஒரு ஆழமான கடுமையான மாற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு புதிய ஒழுங்கை நிறுவும் வகையிலேயே உள்ளன.

சிசி யின் கொடுங்கோன்மைகளை கண்டு கொள்ளாமல் அமெரிக்கா ஆண்டுதோறும் கெய்ரோவுக்கு 1.3 பில்லியன் டொலர் இராணுவ உதவிகளை வழங்குகின்றது.  1978 ஆம் ஆண்டில் கேம்ப் டேவிட் உடன்படிக்கையின் விளைவாக கெய்ரோவும் இஸ்ரேலும் ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதிலிருந்து அமெரிக்காவின் வரி செலுத்துவோர் பணத்தின் மூலம் எகிப்துக்கு 50 பில்லியன் டொலருக்கும் அதிகமான இராணுவ உதவிகளையும் 30 பில்லியன் டொலருக்கும் அதிகமான பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றது.

அமெரிக்க-இஸ்ரேலிய ஆதரவுக்கு ஈடாக, சிசி காசாவில் பலஸ்தீனர்கள் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு உதவியாக நிற்கின்றார்.

பலஸ்தீன ஆண்கள் பெண்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்களை அமெரிக்க-இஸ்ரேலியர்கள் படுகொலை செய்வதை கண்மூடித்தனமாகவும், அமைதியாகவும், பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

காஸாவில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்கள், மருத்துவமனைகள், பள்ளிவாசல்கள், கழிவுநீர் வடிகான்கள், நீர் வழங்கல் திட்டங்கள் என கிட்டத்தட்ட அனைத்தையும் அழித்து விட்டனர்.

அவற்றுக்கு மேலதிகமாக பலஸ்தீனர்களை பட்டினியால் வாட்டி மரணிக்கச்  செய்யும் வகையில்  அந்த மக்களுக்கான மருந்து மற்றும் உணவையும் அவர்கள் தடுத்தனர்.

சிசியின் நிர்வாகத்தின் கீழ் ஒடுக்குமுறையின் முக்கிய கூறுகள் இன்னமும் காணப்படுகின்றன;

  • அரசியல் ஒடுக்குமுறை : அரசாங்கம் அங்கீகரிக்கப்படாத ஆர்ப்பாட்டங்கள் சட்டவிரோதமாக்கப்பட்டன. பத்திரிகையாளர்களை கைது செய்தது, மனித உரிமை பாதுகாவலர்களை குறிவைத்தது, அரசியல் எதிர்ப்புக்களை கச்சிதமாக அகற்றியமை, மற்றும் இதுவரை இல்லாத அரசியல் மாற்றீட்டை உருவாக்கியமை என பட்டியல் நீழுகின்றது.
  • கருத்து வேறுபாடுகளை குறிவைத்தல் :  சிசி  தன்மீதான விமர்சனங்களை தேசத்துரோகத்துடன் ஒப்பிட்டார். செயற்பாட்டாளர்களை குறிவைக்க கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைப் பயன்படுத்தினார்.
  • மனித உரிமைகள் துஷ்பிரயோகங்கள் : சிறைகளில் பரவலான சித்திரவதைகள் நடைபெறுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தீவிரமயமாக்கலுக்கான இனப்பெருக்கம் செய்யும் தளங்களாக இவை விவரிக்கப்படுகின்றன.
  • சர்வாதிகாரத்தை சட்டப்பூர்வமாக்குதல் : ஊடகங்களை தணிக்கை செய்ய, ஊடக ஒழுங்குமுறைக்கான உச்ச சபைக்கு அதிகாரம் அளித்தல், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துதல், உள்ளிட்ட அடக்குமுறை  மூலோபாயங்களை நிரந்தரமாக்கும் வகையில் சிசி யின் ஆட்சி சட்டங்களை மாற்றியமைத்துள்ளது.
  • இராணுவத்துக்கு விடுபாட்டுரிமை : 2018 ஆம் ஆண்டின் 161/2018 ம் இலக்க சட்டத்தின் படி 2013 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக உயர் பதவியில் உள்ள இராணுவ அதிகாரிகள் மீது வழக்குத் தொடர விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க எகிப்தியர்கள் அளப்பரிய தியாகங்களைச் செய்துள்ளனர். சினாய் பிரதேச மண் எகிப்திய இரத்தத்தால் தோய்ந்து போண மண் என்று அடிக்கடி கூறப்படுவதுண்டு.

எகிப்து இல்லாமல் போர் இல்லை எகிப்து இல்லாமல் இஸ்ரேலுடன் சமாதானமும் இல்லை. இந்நிலையில் எகிப்தின் மறைந்த சர்வாதிகாரிகளுக்கும், இன்றைய கொடுங்கோல் ஆட்சியாளருக்கும், அமெரிக்க வரி செலுத்துவோரின் பணத்தின் மூலம் லஞ்சம் கொடுப்பது, இஸ்ரேலுக்கு பிராந்தியத்தில் அதன் தீய வடிவமைப்புகளை செயல்படுத்த மிகவும் அவசியமான அமைதியான ஒரு சூழலை ஏற்படுத்தி கொடுக்கின்றது.

இதனால்தான் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய சட்டவிரோத போர் குறித்து எகிப்து கண்மூடித்தனமாக இருக்கின்றது.

ஆகக் கூடுதலான கல்வியறிவு விகிதத்துடன் எகிப்தை மூன்றாம் உலக சக்தியாக உருவாக்குவதற்கு பெரும் பங்களிப்பை வழங்கக்கூடிய உயர்மட்ட புத்தி ஜீவிகள் தொழில் வல்லுநர்கள் மற்றும் பிறரை உருவாக்கியுள்ள நிலையிலும் கூட எகிப்தின் வெட்கக்கேடான இன்றைய நிலைமை இதுதான்.

-முற்றும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பௌத்தாலோக வெசாக் வலயம் மே 30 ஆரம்பம்

பௌத்தாலோக வெசாக் வலயம் எதிர்வரும் 30ம் திகதி முதல் ஜூன் மாதம்...

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு

யுத்த வெற்றியின் 17 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “தேசிய வெற்றி...

படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்குப் பருவ மழை!

தென்மேற்குப் பருவ மழை நாட்டின் மீது படிப்படியாக நிலைபெற்று வருகிறது. மேற்கு, சப்ரகமுவ,...

மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் தலைமையில், இலங்கை போக்குவரத்து...