பௌத்தாலோக வெசாக் வலயம் எதிர்வரும் 30ம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாணாயக்க மற்றும் பௌத்தாலோக வெசாக் குழுவின் பிரதிநிதிகளுக்கிடையில் நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இம்முறை வெசாக் பண்டிகையை முன்னிட்டு 25வது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்படும் பௌத்தாலோக வெசாக் வலயம் பௌத்தாலோக மாவத்தை பகுதியை கேந்திரமாக கொண்டு மே 30 முதல் ஜூன் முதலாம் திகதி வரை இடம்பெறும்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதி காரியாலயத்தின் தலையீட்டில் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
