சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

Date:

தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை மீண்டும் ஜூலை மாதம் 01 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதுவரை அவரைத் தடுப்பு காவலில் வைத்திருக்குமாறும், அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் சுரேஷ் சலே இன்று (20) நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, சுரேஷ் சலே கடந்த பெப்ரவரி மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

Popular

More like this
Related

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் தொலைபேசி உரையாடல்: உதவிக்கு தயார்!

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிலவும் சூழல் குறித்து, அந்நாட்டு...

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

நேபாளத்தின் கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார...

கடற்பிரதேசங்களில் பலத்த காற்று

புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளில்...

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு...