ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மஹில் டோல் எழுதிய தேசிய பாதுகாப்பு குறித்த ‘Security Beyond Empowerment’ என்ற நூல் வெளியீடு!

Date:

இலங்கை பொலிஸ்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு உளவுத்துறையின் மூத்த நிபுணரான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியும் மஹில் டோல் அவர்கள் எழுதிய “බලගැන්වීමෙන් ඔබ්බට ආරක්ෂාව” (Security Beyond Enforcement) என்ற புதிய நூல் நேற்று (20) பிற்பகல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

கொழும்பில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் முக்கியப் பிரமுகர்கள், பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் எச்.இ. அப்துல்லா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நூலின் முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்.

தேசிய பாதுகாப்பு, உளவுத்துறையின் நுணுக்கங்கள் மற்றும் தற்கால சமூகப் பாதுகாப்பு சவால்கள் குறித்து இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து அக்கறை கொண்ட ஒவ்வொரு குடிமகனும், விழிப்புணர்வு பெற விரும்பும் புத்திஜீவிகளும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு முக்கிய நூலாக இது கருதப்படுகிறது.

பாதுகாப்புத் துறையில் நீண்டகால அனுபவம் வாய்ந்த ஒரு அதிகாரியின் பார்வையில் எழுதப்பட்டுள்ளதால், இந்த புத்தகம் பாதுகாப்பு உத்திகள் குறித்த புதிய சிந்தனையை வாசகர்களுக்கு வழங்கும் என விழாவில் கருத்துப் பகிரப்பட்டது.

Popular

More like this
Related

நீர்கொழும்பு சிறை மோதல்: விசாரணைக்கு குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...

தேர்தல் சட்ட மறுஆய்வு: அனைத்துத் தரப்பினரும் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க அகில இலங்கை முஸ்லிம் லீக் இளைஞர் முன்னணிகள் சங்கம் வேண்டுகோள்!

இலங்கையின் எதிர்காலத் தேர்தல் முறைமை மற்றும் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை...

இஸ்ரேலிய சிறைகளில் பாலஸ்தீன மருத்துவர்களுக்குக் கொடூர சித்திரவதை: உயிருக்குக் கடும் ஆபத்து என மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை!

இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவர்களான ஹுசாம் அபு சபியா (Hussam...