தென்மேற்கு பருவப்பெயர்ச்சி ஆரம்பம்: பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை

Date:

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நாடு முழுவதும் கட்டம் கட்டமாக நிலைகொண்டு வருவதால் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யும்.

குறித்த பகுதிகளில 75 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி கிடைக்கும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென்மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றானது மணிக்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வித்தியா கொலை வழக்கின் தண்டனை கைதி தற்கொலை

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை நியமிக்கப்பட்ட...

ஹஜ் யாத்திரை குறித்து பிரதி அமைச்சர் முனீர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

இம்முறை ஹஜ் யாத்திரையில் பங்கேற்கும் இலங்கை யாத்திரிகர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும்...

ஹஜ் 2026: இலங்கை யாத்திரிகர்களின் நலன்களை ஆராய சவூதி சென்றடைந்தார் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர்!

இலங்கையின் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் பிரதி அமைச்சரும், ஹஜ் தூதுவருமான கௌரவ...