உலகெங்கிலும் இருந்து வருகை தந்துள்ள லட்சக்கணக்கான யாத்திரிகர்கள், ஹஜ்ஜின் முதல் கட்டமாக கூடாரங்களின் நகரம் என்று அழைக்கப்படும் ‘மினா’ (Mina) பகுதியை நோக்கி இன்று காலை முதல் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.
சர்வதேச ஊடகமான அல்ஜசீரா வெளியிட்டுள்ள தற்போதைய தகவல்களின்படி:
இலட்சக்கணக்கான இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்றான ஹஜ் யாத்திரையில் பங்கேற்பதற்காக, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் சவூதி அரேபியாவிற்கு தொடர்ந்து வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து இதுவரை 1,518,153 (15 லட்சத்திற்கும் அதிகமான) யாத்திரீகர்கள் சவூதி அரேபியாவை வந்தடைந்துள்ளதாக சவூதி கடவுச்சீட்டு படையின் தளபதி சலே அல்-முரப்பா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த முறை சர்வதேச யாத்திரீகர்களின் எண்ணிக்கை ஏற்கனவே அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023-ஆம் ஆண்டு, சவூதிக்கு வெளியில் இருந்து 1,506,576 யாத்திரீகர்கள் உட்பட மொத்தம் 1,673,320 பேர் ஹஜ் யாத்திரையில் பங்கேற்றனர்.
ஹஜ் சடங்குகள் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என சவூதி அதிகாரிகள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
யாத்திரீகர்களின் வருகையை முன்னிட்டு சவூதி அரசு விரிவான பாதுகாப்பு மற்றும் மருத்துவ ஏற்பாடுகளை செய்துள்ளது.
