புத்தரின் 2570-ஆம் ஆண்டில் வரும் அரச வெசாக் விழாவை, இவ்வருடம் ‘தட்சிண பிரபா’ என்ற பெயரில், மாத்தறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இன்று (27) தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
புத்தரின் ‘அபித்தரேத கல்யாண’ என்ற உன்னத வார்த்தைகளையும், ‘பொது நன்மைக்காக நாம் ஒன்றுபடுவோம்” என்ற சமூக செய்தியையும் கருப்பொருளாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தேசிய வெசாக் விழா, இன்று, 27ஆம் திகதி முதல் ஜூன் 02ஆம் திகதி வரை மாத்தறை மாவட்டத்தில் நடைபெறும்.
இந்த ஆண்டு அரச வெசாக் விழாவின் பிரதான தொடக்க விழா, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில், திஹகொட, மிதெள்ளவல உள்ள பழமையான ரஜமகா விகாரையில் இன்று தொடங்க உள்ளது.
