International Association For Quality Education மற்றும் Amazon College இணைந்து நடத்திய சர்வதேச தரமான கல்வி மாநாடு 2026.

Date:

சர்வதேச தரமான கல்விக்கான அமைப்பு மற்றும் Amazon College இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச தரமான கல்விக்கான மாநாடு ஸ்ரீலங்கா ஃபவுண்டேஷன் இன்ஸ்டிட்யூட் இல் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கல்வியாளர்கள், கல்வித் துறை நிபுணர்கள், ஆய்வாளர்கள் மற்றும் இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வந்த 17 சர்வதேச பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தரமான முன்பள்ளிக் கல்வி மேம்பாடு, புதுமையான கல்வி நடைமுறைகள் மற்றும் சர்வதேச கல்வி ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாடினர்.

TVEC-இல் பதிவு செய்யப்பட்ட உயர்கல்வி நிறுவனமாகிய Amazon College, உயர்ந்த கல்வித் தரநிலைகளை பேணுவதிலும் கல்வி மேம்பாட்டை முன்னெடுப்பதிலும் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக பேராசிரியர் ஷாணிக்கா ஹிரிம்புரகம கலந்துகொண்டார்.

அவர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் (UGC) முன்னாள் தலைவரும் கொழும்பு பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தருமாவார்.

மாநாட்டில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பேச்சாளர்கள்:
ஜீ. எல். வேர்மன் பெ ரேரா – மேற்கு மாகாண கல்வி, கலாசாரம், கலை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர்.

கொழும்பு பல்கலை கழக பேராசிரியர் ரஞ்சித் பாண்டார – University இன் பேராசிரியர், பொருளாதார நிபுணர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் COPE குழுவின் முன்னாள் தலைவர்.

நிழந்த ஏகனாயக்க– வடமத்திய மாகாண ஆரம்பக் குழந்தைகள் அபிவிருத்தி ஆணையத்தின் முன்னாள் பணிப்பாளர்.

ஜனக கமல்கோட – சர்வதேச தரமான கல்வி சங்கத்தின் தலைவர். இல்ஹாம் மரிக்கார் – Amazon College மற்றும் Campus நிறுவனத்தின் பணிப்பாளர்.
மேலும் இந்தியா மற்றும் நேபாளத்திலிருந்து வந்த பல சர்வதேச பிரதிநிதிகள் கல்விசார் கலந்துரையாடல்கள் மற்றும் தொழில்முறை தொடர்பு அமர்வுகளில் செயற்பாடாக பங்கேற்றனர்.

பல ஆய்வாளர்கள் தங்களது ஆய்வு முன்மொழிவுகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து, கல்வித் துறையில் அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகள் பரிமாற்றத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கினர்.

மாநாட்டின் வெற்றிக்கு பங்களித்த பேச்சாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு பாராட்டு விருதுகளும் வழங்கப்பட்டன.

இந்த மாநாடு, Amazon College நிறுவனத்தின் கல்விசார் மேம்பாடு, தொழில்முறை வளர்ச்சி, ஆய்வு மற்றும் சர்வதேச கல்வி ஒத்துழைப்புகளுக்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...