meningitis வைரஸ் குறித்து பாடசாலைகளுக்கு விசேட அறிவுறுத்தல்

Date:

தற்போது பரவி வரும் என்டரோ வைரஸினால் ஏற்படும் மெனின்ஜயிடிஸ் நோய் தொடர்பில் செயற்பட வேண்டிய விதம் குறித்து சுகாதார அமைச்சு விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதற்கமைய கல்வியமைச்சிற்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நோய் பரவாமல் இருப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கல்வியமைச்சு பாடசாலைகளுக்கு விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

மெனின்ஜயிடிஸ் நோய் வைரஸ் ஊடாக பரவும் நோயாகும். இது சிறுவர்கள் உட்பட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களை அதிகமாக தாக்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நோய் தாக்கத்திற்க உள்ளான சிலர் கடந்த ஏப்ரல் மாதம் மாத்தறை தெனியாய பகுதியில் அடையாளம் காணப்பட்டனர். தற்போது நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலும் நோய் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் பாடசாலை மாணவர்கள் அதிகம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் மாணவர்கள் மத்தியில் நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

இலங்கையின் பல பகுதிகளில் திடீரென மின்வெட்டு

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல...

மொராக்கோ மன்னர் தலைமையிலான புதிய அரசாங்க நியமனம்; பாத்திமா-ஸஹ்ரா மன்சூரி உட்பட 7 பெண் அமைச்சர்கள் பதவியேற்பு.

தலைநகர் ரபாத்தில் உள்ள அரச அரண்மனையில் மன்னர் ஆறாம் முகமது தலைமையில்...

இலங்கையின் மிகவும் உயரமான யானை காவன்திஸ்ஸ உயிரிழந்தது

இலங்கையின் மிகவும் உயரமான யானை என அறியப்பட்ட காவன்திஸ்ஸ உயிரிழந்துள்ளது. அண்மைக்காலமாக...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலின் பின்னர் பலத்த மழை

நாட்டின் அநேகமான பகுதிகளில் இன்று பிற்பகலின் பின்னர் பலத்த மழை பெய்யுமென...