இலங்கையின் மிகவும் உயரமான யானை காவன்திஸ்ஸ உயிரிழந்தது

Date:

இலங்கையின் மிகவும் உயரமான யானை என அறியப்பட்ட காவன்திஸ்ஸ உயிரிழந்துள்ளது. அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த குறித்த யானைக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் அது உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று காலை சியம்பலன்கமுவ பகுதியில் யானை உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. கல்கமுவ பகுதியில் வசித்து வந்த இந்த யானையின் உடல் நிலை தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன.

அதன் முன்பக்க வலது பாதத்தில் காணப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்கு கடந்த மாதம் 24ம் திகதி முதல் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

பாதத்தின் காயம் குறிப்பிட்டளவில் குணமடைந்திருந்த போதிலும் கடந்த சில நாட்களாக யானை உணவருந்துவதில் சிரமங்கள் உள்ளிட்ட வேறு நோய் அறிகுறிகளுக்கு உள்ளானதாக கால்நடை வைத்திய குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே காவன்திஸ்ஸ யானை இன்று காலை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலின் பின்னர் பலத்த மழை

நாட்டின் அநேகமான பகுதிகளில் இன்று பிற்பகலின் பின்னர் பலத்த மழை பெய்யுமென...

லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு விரைவில் தீர்வு.

மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக...

சிராந்தி ராஜபக்ஷவுக்கு பிணை; நீதிமன்றம் உத்தரவு!

‘சிரிலிய சவிய’ நிதியுடன் தொடர்புடைய கணக்கில் நிதியைக் குற்றவியல் ரீதியாக முறைகேடாகப்...

சவூதிக்கான பயணத்தை 24 வரை நிறுத்திய ஸ்ரீலங்கன்

சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் தமாம் விமான நிலையங்களுக்கான சேவைகளை எதிர்வரும்...